வணக்கம்
இது முதல் போஸ்ட் என்பதால் அடக்கி வாசிக்கப் போகிறேன்.
சமீபத்தில் நடந்து முடிந்த காலச்சுவடு கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் கவனிக்கத்தக்கது.
இடது சாரியான பத்திரிக்கையாளர் கிருஷ்னாந்த் சொன்ன தகவல் வருத்தம் தந்தது.
ஒரு முஸ்லீம் உறுப்பினர் தொழுகை நேரம் என்பதால் அவையை ஒத்தி வைக்க வேண்டும் என்று நஜ்மா ஹெப்துல்லாவை கேட்டுள்ளார். அதற்கு இடம் தராது நஜ்மா நடந்துள்ளார்.
இதனை செய்தி ஆக்காமல் இருக்க ஓர் மூத்த நிருபர் முயன்று வென்றுள்ளார்.
இதை ஓர் மத சார்பற்ற நடவடிக்கை என்று அவர் கருதுகிறார் .
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை செய்தியாக்கப் போகும் நிருபர்கள் எதற்கு அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும்?
நடந்தது பெரிய புரட்சியாகவே இருந்தாலும் அதனை அப்படியே சொல்வதுதானே பத்திரிகை தர்மம் ?
அதனை விட்டு விட்டு அரசியல் செய்வது மக்கள் மன்றத்தை இருட்டடிப்பு செய்யும் வேலை அல்லவா?
நஜ்மா பின்னர் பாஜக போனது வேறு விஷயம்.
இது இடது சாரிகளின் வழக்கமான அரசியல் தவிர வேறென்ன ?
இதனால் பாஜக வுக்குத்தான் இலாபம்.
இதே விஷயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து இருந்தால் தலைவர்கள் முதலில் நஜ்மாவை பாராட்டிவிட்டு விஷயத்தை உண்மையான மத சார்பற்ற செய்கையாக முன்னிறுத்தி வெற்றி கண்டிருப்பார்கள். இருட்டடிப்பு செய்திருக்க மாட்டார்கள்.
இன்றைய இடது தலைவர்களின் நுட்பம் வேறு மாதிரி போல!
விஷயங்களை அமுக்கவே விரும்புகிறார்கள். வெளிப்படையாக விவாதிக்க தயாரில்லையோ? என்ற வினாவே எழுகிறது.
Sunday, May 11, 2008
Subscribe to:
Comments (Atom)